இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் 1,557 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இது ஏறக்குறைய இரண்டு மடங்கு வளர்ச்சி என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் சுற்றுலாத்துறை வருமானம் தவிர்ந்த 1,762 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சேவைத் துறைக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் முதல் 06 மாதங்களில் வெளிநாட்டு ஊழியர்களின் பணம் 3,144 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் வெளிநாட்டு ஊழியர்களின் பணம் 2,823 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஜூன் மாதம் இறுதிக்குள், நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 5.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியும் ஜூன் மாதம் வரையில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.