Thursday, March 26, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதமிழரசுக் கட்சியினரை சந்தித்த அனுர

தமிழரசுக் கட்சியினரை சந்தித்த அனுர

தேசிய மக்கள் சக்தியினருக்கும் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று காலை யாழில் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துள்ள அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் மாவை சேனாதிராசா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரை சந்தித்து கலந்துரையாடினர்.

யாழ்ப்பாணம் மார்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை இச் சந்திப்பு இடம்பெற்றது.

இதன் போது பிரதானமாக ஐனாதிபதித் தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலைமைகள் எனப் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இச் சந்திப்பில் தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராசா துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், நிர்வாக செயலாளர் குலநாயகம், ஊடகப் பேச்சாளர் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அதே போன்று தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அதன் தலைவர் அனுரகுமாரதிசாநாயக்க மற்றும் அக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை திடிரென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான குழுவினர் நேற்றையதினம் தமிழரசுக் கட்சியினரைச் சந்தித்து கலந்துரையாடியிருந்த நிலையில் இன்றையதினம் தேசிய மக்கள் சக்தியினரும் தமிழரசுக் கட்சியினரை சந்தித்துள்ளமை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles