Thursday, June 25, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமனைவிக்கு எமனான கணவன்

மனைவிக்கு எமனான கணவன்

தலஹேன பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் இன்று (11) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் இன்று (11) அதிகாலை கொலையொன்று இடம்பெற்றுள்ளதாக தலங்கம பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதுடன், கொலையை செய்த சந்தேகநபர்கள் இருவரினால் தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

படுகொலை செய்யப்பட்ட யுவதியும் அவரது கணவரும் மாலம்பே, தலஹேன பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்ததுடன், கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து இக்கொலை இடம்பெற்றுள்ளது.

31 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறுஉயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles