இலங்கையிலும் இலங்கையைச் சூழவுள்ள கடற் பிராந்தியங்களிலும் தென்மேல் பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான நிலைமை காரணமாக காற்று, மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சில பகுதிகளில் இன்று (17) நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அத்துடன் மேல், மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
அத்துடன் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.