Tuesday, April 21, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅஹுங்கல்ல துப்பாக்கிச்சூடு: மற்றுமொருவர் கைது

அஹுங்கல்ல துப்பாக்கிச்சூடு: மற்றுமொருவர் கைது

அஹுங்கல்லயில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை வழிநடத்தி உதவியதற்காக ‘பாபா’ என அழைக்கப்படும் கலுஹாட் நாதிஷ் அப்ரு என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து நேற்று (16) அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லிய தேவாலய, கல்வெஹெர, அஹுங்கல்ல என்ற முகவரியில் சோதனை நடத்தப்பட்டது.

இதன்போது அஹுங்கல்லவைச் சேர்ந்த 37 வயதுடைய மேற்படி சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் 02 கையடக்கத் தொலைபேசிகளுடன் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக அஹுங்கல்ல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles