Friday, March 14, 2025
27.5 C
Colombo
செய்திகள்உலகம்பரிஸில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தவுள்ள இலங்கை தமிழர்

பரிஸில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தவுள்ள இலங்கை தமிழர்

ஒலிம்பிக் தீப்பந்தத்தின் நீண்ட அஞ்சலோட்ட சுற்றுப்பயணம் பிரான்ஸ் முழுவதும் இடம்பெற்றுவரும் நிலையில் பரிஸில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் வாய்ப்பு ஈழத் தமிழர் ஒருவருக்கு கிடைத்துள்ளது.

பரிஸ் நகரில் கடந்த வருடம் சிறந்த பாண் தயாரிப்பில் முதலிடம் பெற்ற தர்ஷன் செல்வராஜா, பிரான்ஸ் ஜனாதிபதியின் வசிப்பிடமாகிய எலிஸே மாளிகைக்குப் பாண் விநியோகம் செய்யும் பெருமையைப் பெற்றவர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் பிரான்ஸின் பரிஸில் இடம்பெற்ற சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில் கடந்த ஆண்டுக்கான விருதை வென்றிருந்தார். இவருக்கு இம்முறை ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles