Thursday, June 25, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை வரும் அமெரிக்க பிரதிநிதி

இலங்கை வரும் அமெரிக்க பிரதிநிதி

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இன்று (10) இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இன்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை தெற்காசிய பிராந்தியத்தில் தங்கியிருக்கும் அவர், இந்தியாவைத் தொடர்ந்து இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கும் விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு நாட்டுடனும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே அவரது பயணத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது இலங்கை விஜயத்தின் போது, ​​நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்காவின் ஆதரவு மீண்டும் உறுதிப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles