Friday, March 14, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅஹுங்கல்ல துப்பாக்கித்தாரிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மீட்பு

அஹுங்கல்ல துப்பாக்கித்தாரிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மீட்பு

அண்மையில் (08) அஹுங்கல்ல லோகன்வத்த பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொஸ்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்வெல்டுவஇ சுதுவெலிபொத்த பிரதேசத்தில் உள்ள கறுவாத் தோட்டத்தில் இந்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை தனது காணியில் கறுவா வெட்டச் சென்ற உரிமையாளர் மோட்டார் சைக்கிளொன்று எரிந்து கிடப்பதைக் கண்டு கொஸ்கொட பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

அதன்படி இன்று காலை மோட்டார் சைக்கிள் மீட்கபட்ட போது அது தீக்கிரையாகி இருந்ததாக கொஸ்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மையில் அஹுங்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற குற்றச் சம்பவத்திற்கு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் இந்த மோட்டார் சைக்கிளை பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles