Thursday, June 25, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடயனாவின் மனு விசாரணை ஒத்திவைப்பு

டயனாவின் மனு விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியிலிருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி அவர் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காமினி அமரசேகர,குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் மகிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்றத்தின் முன் இந்த மனு இன்று (10) அழைக்கப்பட்டது.

அப்போது, ​​டயனா கமகே சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபா, இந்த மனு தொடர்பான தீர்மானத்தை அறிவிப்பதற்கு திகதி வழங்குமாறு கோரினார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட மனுவை இம்மாதம் 28ம் திகதி அழைப்பதாகவும், இந்த மனுவை விசாரிப்பது தொடர்பான முடிவை அன்றைய தினம் அறிவிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, பொதுச் செயலாளர் ரஞ்சித் மந்தும பண்டார உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles