Friday, May 9, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாதல் வலையில் சிக்கி யுவதியிடம் ஏமாந்த உயர் அதிகாரி

காதல் வலையில் சிக்கி யுவதியிடம் ஏமாந்த உயர் அதிகாரி

தனியார் நிறுவனமொன்றின் உயர் நிர்வாக அதிகாரி ஒருவருடன் தகாத உறவை பேணி, அவரிடமிருந்து சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடிய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை – பின்வத்த பொலிஸ் எல்லைக்குட்பட்ட மெதவெல்ல வீதியில் வசிக்கும் 41 வயதுடைய திருமணமான பாதிக்கப்பட்ட நபர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் உள்ள இரவு விடுதியில் குறித்த பெண்ணை கண்டு தொடர்பு ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து தனது மனைவியை விட்டு விலகியதாகவும் பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்தார்.

சந்தேக நபரான இளம் பெண் மற்றொரு இளைஞனுடன் சேர்ந்து ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதுடன், அவர்கள் வீட்டின் பின்பக்க ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து, நவீன மடிக்கணினி, 55 அங்குல தொலைக்காட்சி, கைக்கடிகாரங்கள் உட்பட பல பெறுமதியான பொருட்களை திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், அவர்கள் திருடிய பொருட்களை அப்பகுதியில் உள்ள பல்வேறு இடங்களுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளதுடன், அவை தற்போது பின்வத்த பொலிஸாரால் மீட்கப்பட்டு வருகின்றன.

அந்த வீட்டில் பொருட்களை திருடுவதற்காக மற்றுமொரு நபருடன் மெதவெல்ல வீதியூடாக அவர் பயணிப்பதும் திருடப்பட்ட பொருட்களை முச்சக்கரவண்டியில் ஏற்றிக்கொண்டு செல்வதும் அங்கிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles