டுபாயில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான டுபாய் கபில என்றழைக்கப்படும் வாசனா சமந்த பெர்னாண்டோ என்பவருக்கு சொந்தமான 15 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருளை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இன்று (02) அதிகாலை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த போதைப்பொருள் மீட்கப்பட்டது.
இதன்போது 13 கிலோ ஹெரோயின், 6 கிலோ ஹேஷ், 500 கிராம் கொக்கெய்ன் மற்றும் 15 இலட்சம் ரூபா பணம் ஆகியவற்றை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.