Friday, May 17, 2024
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉமா ஓயா திட்டத்தினால் நாளாந்தம் 80 மில்லியன் ரூபா சேமிப்பு

உமா ஓயா திட்டத்தினால் நாளாந்தம் 80 மில்லியன் ரூபா சேமிப்பு

உமா ஓயா அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மின்சார சபைக்கு நாளொன்றுக்கு 80 மில்லியன் ரூபா சேமிக்கப்படும் என அதன் திட்டப் பணிப்பாளர் சுதர்ம எலகந்த தெரிவித்துள்ளார்.

உமா ஓயா திட்டத்தினால் இதுவரை சுமார் 1,500 மில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் சுமார் ஒருமாத காலமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஆகியோரின் தலைமையில் குறித்த திட்டம் அண்மையில் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

2007 நவம்பர் 27ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் 2008 ஏப்ரல் 21ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Keep exploring...

Related Articles