போகம்பர சிறைச்சாலையில் கைதி ஒருவர் இன்று (02) அதிகாலை சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கண்டி, மஹய்யாவ பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ரங்கசுவாமி புவனேந்திரம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த நபர் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதானவர் என கூறப்படுகிறது.