Friday, May 17, 2024
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுOnmax DT நிறுவனத்தின் 4 பணிப்பாளர்கள் திறந்த நீதிமன்றத்தில் ஆஜர்

Onmax DT நிறுவனத்தின் 4 பணிப்பாளர்கள் திறந்த நீதிமன்றத்தில் ஆஜர்

Onmax DT நிறுவனத்தின் பணிப்பாளர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் 6, 7 ஆவது சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதம நீதவான் திலின கமகே இன்று பிடியாணை பிறப்பித்துள்ளார்.

ஆறாவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும், பிணையில் விடுவிக்கப்பட்ட 8 நாட்களுக்குள் அவர் இரகசியமாக வெளிநாடு சென்றுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மன்றில் தெரிவித்துள்ளனர்.

ஏழாவது மற்றும் எட்டாவது சந்தேகநபர்கள் என பெயரிடப்பட்ட இருவர் தற்போது நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதனால், சந்தேகநபர்கள் மூவரையும் கைது செய்வதற்கு திறந்த பிடியாணை பிறப்பிக்க வேண்டியுள்ளதால், அது  தொடர்பான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் விசாரணை அதிகாரிகள் மன்றில் சுட்டிக்காட்டினர்.

குறித்த நிறுவனத்தின் உதவி பணிப்பாளர்கள் மற்றும் பண மோசடிக்கு ஆதரவளித்த பலர் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அத்துடன் Onmax DT  நிறுவனத்தின் பிரமிட் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்த வைப்பாளர்களின் பணத்தை, மீள செலுத்துவதற்கான வேலைத்திட்டத்தை தயாரித்து மன்றில் சமர்ப்பிக்குமாறு நிறுவனத்தின் பணிப்பாளர்களுக்கு இன்று பிரதம நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Onmax DT  நிறுவனத்தின் 04 பணிப்பாளர்கள் இன்று திறந்த நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு ஆஜராகியது.

இந்த வழக்கு மே 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Keep exploring...

Related Articles