Saturday, May 18, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதியத்தலாவ கோர விபத்து தொடர்பில் வௌியான புதிய தகவல்கள்

தியத்தலாவ கோர விபத்து தொடர்பில் வௌியான புதிய தகவல்கள்

தியத்தலாவ பொக்ஸ் ஹில் மோட்டார் வாகன ஓட்ட பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 23 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

2024 பொக்ஸ் ஹில் மோட்டார் பந்தயம் இன்று காலை தியத்தலாவ நரியகந்த பந்தய திடலில் ஆரம்பமானது.

5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் போட்டி நடைபெற்றது.

இந்த மோட்டார் வாகன ஓட்ட பந்தயம் இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட நிலையில் அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து கடந்த 5 வருடங்களாக போட்டிகள் நடத்தப்படவில்லை எனவும், இம்முறை பந்தயத்திற்கு அதிகளவானவர்கள் பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நேற்று (21) காலை ஆரம்பமான இப்போட்டியில் கார் ஒன்று பந்தய திடலை விட்டு விலகி பயணித்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்த 7 பேரில் 8 வயது சிறுமியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் 4 பந்தய உதவியாளர்களும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

விபத்தின் பின்னர் பந்தயத்தை நிறுத்த நடவடிக்கை எடுத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் ஓட்ட பந்தயத்தில் ஈடுபட்ட இரு வாகன ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டுள்தாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் குறித்த இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Keep exploring...

Related Articles