Monday, March 16, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவீடொன்றில் இருந்து இரு வயோதிப பெண்களின் சடலங்கள் மீட்பு

வீடொன்றில் இருந்து இரு வயோதிப பெண்களின் சடலங்கள் மீட்பு

களுத்துறை, இசுரு உயன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (17) இரவு இரு வயோதிப பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இருவரது சடலங்களும் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

களுத்துறை குற்றப் புலனாய்வு ஆய்வக அதிகாரிகள் நீதவான் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles