Thursday, January 16, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமூட நம்பிக்கையால் பறிபோன ஆசிரியையின் உயிர்

மூட நம்பிக்கையால் பறிபோன ஆசிரியையின் உயிர்

பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த, அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான கோவிந்தசாமி கல்பனா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என குடும்பத்தினர் நம்பியுள்ளனர்.

அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது, அவருக்கு பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அகற்ற வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்ட மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் குறித்த பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார்

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில், உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles