Tuesday, June 23, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் காயம்

மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் காயம்

சாவகச்சேரி, கச்சாய் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சாய் வீதி மகிழங்கேணிச் சந்திப் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

சாவகச்சேரிப் பகுதியில் இருந்து தனது இரண்டு பேரக் குழந்தைகளை மோட்டார்சைக்கிளில் ஏற்றி சென்ற நபர் மகிழங்கேணிப் பகுதியில் மோட்டார் சைக்கிளை கிளை வீதிக்கு திருப்ப முற்பட்ட வேளையில் பின்பக்கமாக வேகமாக மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு குழந்தைகள் மற்றும் வேகமாக மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த நபர் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒரு சிறுமி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து இடம்பெற்ற இடத்தில் மதுப்போத்தல்கள் வீழ்ந்து கிடந்த நிலையில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles