இவ்வருடத்தின் முதல் சூரிய கிரகணத்தை மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, பசுபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பகுதியில் உள்ள பல நாடுகளில் உள்ள மக்கள் பார்வையிட்டுள்ளனர்.
இந்த முழு சூரிய கிரகணத்தை சுமார் 32 மில்லியன் மக்கள் பார்த்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மெக்சிகோவின் மசாட்லானைச் சுற்றியுள்ள மேற்குக் கடற்கரையில், உள்ளூர் நேரப்படி காலை 11:07 மணிக்கு இந்த சூரிய கிரகணம் முதலில் தென்பட்டுள்ளது.
பின்னர், இது அமெரிக்கா மற்றும் கனடாவின் அட்லாண்டிக் கடற்கரை முழுவதும் தென்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், நாசா தங்கள் இணையதளங்கள் மூலம் கிரகணத்தை நேரடியாக ஒளிபரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தது.
எதிர்வரும் ஓகஸ்ட் 22 ஆம் திகதி அமெரிக்காவுக்கு மீண்டும் முழு சூரிய கிரகணத்தை பார்வையிட வாய்ப்பு கிடைக்கும்.