Friday, April 17, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசெத்தம் வீதியில் பயணித்த நபரின் தலையில் விழுந்த ஜன்னல்

செத்தம் வீதியில் பயணித்த நபரின் தலையில் விழுந்த ஜன்னல்

கொழும்பு கோட்டை செத்தம் வீதியில் அமைந்துள்ள பழைய கட்டடமொன்றில் இருந்து ஜன்னல் ஒன்று வீதியில் நடந்து சென்ற நபரின் தலையில் விழுந்துள்ளது.

இந்நிலையில், குறித்த நபர் படுகாயமடைந்துள்ளதுடன், நேற்று (08) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த நபரின் அடையாளம் தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles