Saturday, August 9, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீன் பிடிக்க சென்ற இளைஞன் வலையில் சிக்கி மரணம்

மீன் பிடிக்க சென்ற இளைஞன் வலையில் சிக்கி மரணம்

இளைஞர் ஒருவர் மீன்பிடிக்கச் சென்ற போது தான் பயன்படுத்திய வலையில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

புனானி, மயிலதென்ன, அத்தே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில், உயிரிழந்தவரின் தந்தை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் நேற்று (25) மாலை செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் சுகயீனம் காரணமாக வீட்டில் வேலையில்லாமல் இருந்ததாகவும், புனானி ஏரியில் மீன்பிடிப்பதற்காக மீன்பிடி வலையை எடுத்து சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் நீதவான் பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles