தற்போது வெளிநாட்டில் இருக்கும் 07 அமைச்சர்களை உடனடியாக இலங்கைக்கு அழைத்து வருமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இரண்டாவது நாளாக இன்று நடைபெறவுள்ளது.
இது தொடர்பான வாக்கெடுப்பு நாளை (21) நடைபெறவுள்ளதுடன், அவர்களை வாக்களிக்க நாட்டுக்கு திரும்பி வருமாறு ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி அமைச்சர் பந்துல குணவர்தன, பவித்ரா வன்னியாரச்சி, மனுஷ நாணயக்கார, பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே, அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட 7 பேருக்கு நாடு திரும்புமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.