Monday, May 12, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும், அதற்கமைய விமானப் பயணிகளால் அதிகமாக பயன்படுத்தப்படும் இடமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மாறியுள்ளதாகவும் விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் தனியார் நிறுவனத் தலைவர் அதுல கல்கெட்டிய தெரிவித்துள்ளார்.

அதன்படி 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 19 வரையில் 850,000 விமானப் பயணிகள் விமான நிலைய சேவைகளைப் பெற்றுக்கொண்டுள்ளதோடு, இந்த வருட இறுதிக்குள் சுமார் 10 மில்லியன் பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்திய மொத்த விமானப் பயணிகளின் எண்ணிக்கை 05 மில்லியனாக இருந்ததாகவும், 2023ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கையை 08 மில்லியனாக அதிகரிக்க முடிந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles