Thursday, January 16, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமனித நுகர்வுக்கு உகந்ததல்லாத உணவு விற்பனை- உரிமையாளர்களுக்கு அபராதம்

மனித நுகர்வுக்கு உகந்ததல்லாத உணவு விற்பனை- உரிமையாளர்களுக்கு அபராதம்

மட்டக்களப்பு செங்கலடி சுகாதார பிரிவின் கீழ் உள்ள உணவகங்களில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற முறையில் நோய் தொற்றை உண்டாக்க கூடியவாறு உணவை களஞ்சியப்படுத்தி விற்பனை செய்த 4 உணவக உரிமையாளர்களுக்கு எதிராக ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை (22) வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதன்போது நீதவான் அவர்களை கடுமையாக எச்சரித்து ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்துமாறும் உத்தரவிட்டதுடன் கைப்பற்றப்பட்ட உணவு பொருட்களை அழிக்குமாறு கட்டளையிட்டார்.

செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான குழு நேற்று (22) உணவகங்களை முற்றுகையிட்டு திடீர் பரிசோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது.

இதன் போது மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவை விற்பனை செய்த உணவக உரிமையாளர்களிடம் இருந்து பெரும் தொகையிலான உணவுகள் கைப்பற்றப்பட்டதுடன் 04 பேருக்கு எதிராக ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த திடீர் சோதனை நடவடிக்கையில் மேலும் கண்டுபிடிக்கப்பட்ட சுகாதாரமற்ற முறையில் உணவுகளை விற்பனை செய்து வந்த உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக எதிர்வரும் 26ம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பரமானந்தராசா தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles