சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவரையும் இரண்டு மாணவர்களையும் தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பதின்மூன்று மாணவர்களுக்கும் பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் இன்று (15) பிணை வழங்கியது.
கடந்த 12ஆம் திகதி ஏழு மாணவர்களை கைது செய்யப்பட்டதுடன், 14ஆம் திகதி மேலும் 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 09 ஆம் திகதி இரவு சப்ரகமுவ பல்கலைக்கழக விவசாய பீடத்தின் மாணவி ஒருவரும் இரண்டு மாணவர்களும் சிற்றுண்டிச்சாலையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது சிரேஷ்ட மாணவர்கள், மின்சாரத்தை துண்டித்து தடிகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களான மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.