முகத்துவாரம் – அளுத் மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளை கடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் நேற்று (14) விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, 112 கிராம் 690 மில்லிகிராம் ஹெரோயின், 51 கிராம் 550 மில்லிகிராம் ஐஸ், இலத்திரனியல் தராசு, போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்ததாக சந்தேகிக்கப்படும் 170,000 ரூபா மற்றும் போதைப்பொருள் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு ஜீப் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கொழும்பு 15 – முகத்துவாரம் பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.