Sunday, March 15, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபடகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலி

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலி

கிண்ணியா – கண்டல் காடு – கருவா தீவு ஆற்றில் இன்று படகு கவிழ்ந்ததில் இருவர் பலியாகியுள்ளனர்.

கிண்ணியா ஆலங்கேணி பகுதியைச் சேர்ந்த 17 வயது இளைஞனும், திருகோணமலையைச் சேர்ந்த 56 வயதான ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

இன்று அதிகாலை ஒரு மணி அளவில் ஈச்சன்தீவு ஆற்றில் இருந்து கண்டல்காடு பகுதிக்கு மகாவலி கங்கை ஆற்றின் ஊடாக படகில் பயணித்தபோது, இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

படகில் நான்கு பேர் பயணித்ததாகவும், இருவர் கரையை நீந்தி தப்பித்துக் கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .

சம்பவம் குறித்து கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles