பாணந்துறை பொலிஸாரும் கடற்படையின் உயிர்காக்கும் படையினரும் இணைந்து நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட 5 பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
பாணந்துறை கடற்பரப்பில் நேற்று (13) மாலை நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுமிகள் மற்றும் இரண்டு சிறு பிள்ளைகள் உட்பட ஐந்து பேரின் உயிர்கள் இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இந்த ஐவரும் வயோதிப தம்பதியுடன் நேற்று (13) பாணந்துறை கடற்கரைக்கு சென்று நீராடிக் கொண்டிருந்துள்ளனர்.
எவ்வாறாயினும், அவர்கள் திடீரென அலையில் சிக்கி மெதுவாக கடலை நோக்கிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் அவர்கள் உதவிக்காக கூச்சலிட்டுள்ளதுடன், அருகில் இருந்த 2 பொலிஸ் மற்றும் கடற்படை உயிர்காக்கும் வீரர்கள் நீரில் குதித்து அவர்களை காப்பாற்றியுள்ளனர்.