Friday, January 17, 2025
28.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் மரணம்

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் மரணம்

மல்வத்துஹிரிபிட்டியவில் சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (11) இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய 51 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, பொலிஸ் உத்தியோகத்தரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அவரது கடமை துப்பாக்கியை திருடிய சந்தேக நபர் நேற்று (11) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபருடன் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சந்தேகநபரால் கடத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி மற்றும் நான்கு துப்பாக்கிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து கிடைத்த தகவலின் பிரகாரம், கம்பஹா, வத்துருகம பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரிவோல்வர் மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான முச்சக்கர வண்டி சாரதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles