Monday, May 5, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிசேட சுற்றிவளைப்பு: 705 பேர் கைது

விசேட சுற்றிவளைப்பு: 705 பேர் கைது

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 705 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 553 சந்தேக நபர்களும் குற்றவியல் திணைக்களத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்த 152 சந்தேக நபர்களும் அடங்குவர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 05 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டு வந்த 03 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 553 சந்தேக நபர்களில் 03 போதைக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது 143 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின், 134 கிராம் 578 மில்லிகிராம் ஐஸ், 2 கிலோகிராம் 888 கிராம் கஞ்சா, 3 கிலோகிராம் 339 கிராம் மாவா, 928 கிராம் மதன மோதகம் மற்றும் 255 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles