கப்பல்களுக்கான எரிபொருள் நிரப்பும் செயல்பாடுகளை (bunkering system) மீள ஆரம்பித்ததன் மூலம் 5,200 மெற்றிக் டொன் எரிபொருளை விற்பனை செய்து 03 மில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்ட முடிந்ததாக மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி. வீ. சானக தெரிவித்தார்.
வலுசக்தி தேவைகளுக்காக 200 மில்லியன் டொலர்கள் மேலதிகக் கையிருப்பு பேணப்படுவதாகும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக இவ்வாறு தெரிவித்தார்.