Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழ். மக்கள் சுதந்திர தினத்தை கொண்டாடியதை வரவேற்கிறேன் - சரத் வீரசேகர

யாழ். மக்கள் சுதந்திர தினத்தை கொண்டாடியதை வரவேற்கிறேன் – சரத் வீரசேகர

யாழ்ப்பாணத்தில் தேசியக் கொடிய ஏந்தியவாறு பொதுமக்கள் சுதந்திர தினத்தை கொண்டாடியதை வரவேற்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்கள் இலங்கையின் சுதந்திர தினத்தை சந்தோஷமாக கொண்டாடி வருகின்றமை அனைவரும் அறிந்த விடயம்.

அதேபோல் இந்த வருடம் யாழ்ப்பாண நகரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தேசிய கொடியினை ஏந்தியவாறு இலங்கை 76 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடியமை வரவேற்கத்தக்கது.

இன்று தான் யாழ்ப்பாண தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைத்த நாளாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். அதாவது பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு மக்கள் சுதந்திரமாக சுதந்திர தினத்தை கொண்டாடியதை நான் நேரில் பார்வையிட்டேன். அதுதான் உண்மையான நல்லிணக்கம்.

ஆனால் தமிழ் மக்களின் இந்த சுதந்திரமான நிலைமையினை குழப்புவதற்கு ஒரு குழு நடவடிக்கை எடுத்து வருகிறது.

வடக்கில் தற்பொழுது பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு மக்கள் நிம்மதியாக சுதந்திர தினத்தை கொண்டாடியதை நான் வரவேற்கிறேன் என்றார்.

நாளையும், நாளை மறுதினமும் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

அனைத்து மதுபானசாலைகளும் நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) ஆம் திகதிகளில் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதித்...

Keep exploring...

Related Articles