Wednesday, May 6, 2026
31 C
Colombo
வடக்குசிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்த சந்தேகநபர் தப்பியோட்டம்

சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்த சந்தேகநபர் தப்பியோட்டம்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில், சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் நேற்ற முன்தினம் காலை தப்பியோடியுள்ள நிலையில், அவரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 26 ஆம் திகி கஞ்சா விற்பனை மற்றும் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த சந்தேக நபர், நெளுக்குளம் பொலிஸாரினானால் கைது செய்யப்பட்டார்.

28 வயதான குறித்த சந்தேக நபர் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆயர்படுத்தப்பட்ட பின்னர் வவுனியா சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த 29 ஆம் திகதியன்று, சிறைச்சாலையில் அவருக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில், சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

சிகிச்சை பெற்று வந்த சந்தேக நபர், நேற்று முன்தினம் காலை 6.00 மணியளவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியுள்ளார்.

சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கையை வவுனியா பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles