சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு மூலம் கொழும்பு நகரினுள் போக்குவரத்து விதிகளை மீறிய 675 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்ட சாரதிகளை எச்சரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன்,குறித்த சாரதிகளுக்கு அது தொடர்பில் அறிவுறுத்தல்கள் அடங்கிய அறிவித்தல் ஒன்றையும் அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் முதலாம் திகதி முதல் கொழும்பு நகரில் சிசிடிவி மூலம், போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொண்டதாக அடையாளம் காணப்படும் வாகன சாரதிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.