Wednesday, April 30, 2025
29.1 C
Colombo
செய்திகள்உலகம்அயோத்தி ராமர் கோவில் இன்று திறப்பு

அயோத்தி ராமர் கோவில் இன்று திறப்பு

வட இந்தியாவின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் இன்று (22) திறக்கப்படவுள்ளது.

இன்று மதியம் 12.20 மணிக்கு திறப்பு விழா ஆரம்பிக்க உள்ளதாகவும், இந்நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவுக்கு உலகம் முழுவதிலுமிருந்து 7,000க்கும் மேற்பட்ட முக்கியஸ்தர்கள் மற்றும் விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

70 ஏக்கர் பரப்பளவு கொண்ட அயோத்தி புனித மைதானத்தில் 7.2 ஏக்கர் பரப்பளவில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.

இது மூன்று தளங்களைக் கொண்டுள்ளதுடன், இன்று தரை தளம் மட்டுமே திறக்கப்படவுள்ளது

உலகெங்கிலும் உள்ள பல்வேறு மதங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக ராமர் கோயில் மாறும் என்று வெளிநாட்டு விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles