Monday, June 22, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாதாள குழுக்களுடன் தொடர்பை பேணிய இராணுவ சிப்பாய் கைது

பாதாள குழுக்களுடன் தொடர்பை பேணிய இராணுவ சிப்பாய் கைது

பாதாள குழுக்களுடன் தொடர்பை பேணிய இராணுவ சிப்பாய் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கஹதுடுவ – உஸ்வத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் ஜூன் மாதம் 21ஆம் திகதி பலப்பிட்டிய பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் மற்றும் 18ஆம் திகதி பலபிட்டிய பிரதேசத்தில் கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் தேடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சோதனையின் போது சந்தேகநபரின் வீட்டில் 18 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர் தற்போது விசேட அதிரடிப்படையில் கடமையாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கஹதுடுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இன்று (22) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles