அணிசேரா நாடுகளின் 19வது அரச தலைவர் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (18) உகண்டா நோக்கி பயணிக்கவுள்ளார்.
அந்தப் பயணத்தின் போது, 77 – சீனாவின் மூன்றாவது தெற்கு உச்சி மாநாட்டிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.
உகண்டா குடியரசின் ஜனாதிபதி யோவேரி முசெவேனியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
அணிசேரா நாடுகளின் நாடுகளின் தலைவர்களின் 19வது உச்சி மாநாடு உகண்டாவின் கம்பாலாவில் ஜனவரி 19 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை ‘பகிரப்பட்ட உலகளாவிய செழுமைக்கான ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல்’ என்ற தலைப்பில் நடைபெறவுள்ளது.