Thursday, April 30, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமோட்டார் சைக்கிள் - லொறி மோதி விபத்து: 15 வயது சிறுவன் பலி

மோட்டார் சைக்கிள் – லொறி மோதி விபத்து: 15 வயது சிறுவன் பலி

மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (17) இரவு மதுரங்குளி-விருதோடை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதுரங்குளி – விருதோடை பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் பதிவு செய்யப்படவில்லை எனவும், விபத்து இடம்பெற்றபோது மோட்டார் சைக்கிளின் விளக்குகள் இயங்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த பாடசாலை மாணவர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles