Sunday, March 15, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிசேட சுற்றிவளைப்பு: 952 பேர் கைது

விசேட சுற்றிவளைப்பு: 952 பேர் கைது

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் 952 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 11 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், கைதானவர்களில் போதைப்பொருட்களுக்கு அடிமையான 10 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் விசேட பணியகத்தினால் தேடப்படும் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள 29 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, சுமார் 3 கிலோ ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 4,310 போதைமாத்திரைகள் உள்ளிட்ட பல போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles