இந்தியாவில் மத்திய பிரதேசத்தின் தார் நகரில் பட்டத்தின் நூலால் கழுத்தறுக்கப்பட்டு சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (14) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 07 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்சிறுவன் தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது பட்டத்தில் கட்டப்பட்டிருந்த நூலில் கழுத்து மாட்டிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த விபத்தில்,சிறுவனின் கழுத்தில் பலத்த வெட்டு விழுந்துள்ளதுடன், சிறுவனின் குழந்தையின் தந்தை உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
சிறுவன் அந்த மருத்துவமனையில் இருந்து மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
காத்தாடியில் கட்டப்பட்டிருந்த ‘மாஞ்சா’ எனப்படும் சீன நூலால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், இந்த வகை நூலுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.