Thursday, October 9, 2025
30 C
Colombo
செய்திகள்விளையாட்டுசிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வென்றது

சிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வென்றது

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டி நேற்று இடம்பெற்றது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக சிக்கந்தர் ராசா 62 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில், இலங்கை அணியின் மகீஷ் தீக்ஷன 16 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்தநிலையில், 144 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக, எஞ்சலோ மெத்யூஸ் 46 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில், சிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா 13 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles