நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கருவாடு மற்றும் மாசித்துண்டுகள் முதன்முறையாக அவுஸ்திரேலியா மற்றும் கொரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கருவாடு மற்றும் மாசித்துண்டுகள் கொண்ட 10,000 கிலோ கொள்கலன் அவுஸ்திரேலியா மற்றும் கொரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
தங்காலை – பஹஜ்ஜவ பிரதேசத்தில் அமைந்துள்ள கருவாடு மற்றும் மாசித்துண்டுகள் உற்பத்தி ஆலையானது முதலாவது தொகுதியை ஏற்றுமதி செய்துள்ளது.