கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 23 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவரது ஒன்றரை வயது மகளும் 26 வயதுடைய கணவரும் காயமடைந்து ஹிங்குரன்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
நேற்று (10) இரவு பெய்த கடும் மழையுடன் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.