அரச மருத்துவமனைகளில் இன்று (09) வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா உதவித்தொகை வழங்காததை கண்டித்து அடையாள வேலைநிறுத்தம் நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இன்று காலை 08.00 மணிக்கு இந்த போராட்டம் ஆரம்பமாகவுள்ளது.