Sunday, November 10, 2024
33 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதட்டம்மை நோய்க்கான தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் நாளை

தட்டம்மை நோய்க்கான தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் நாளை

6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை நோயிற்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் மத்தியில் தட்டம்மை நோய் அதிகளவில் பரவி வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தட்டம்மை நோயாளர்கள் அதிகமாக பதிவாகியுள்ள 9 மாவட்டங்களை இலக்கு வைத்து இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, யாழ்ப்பாணம், குருணாகல் மற்றும் கல்முனை ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்றும் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

தொற்று நோய்க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அருகிலுள்ள தடுப்பூசி மையங்களுக்குச் சென்று, 6 முதல் 9 மாதங்களுக்கு இடையிலான குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு பெற்றோருக்கு சுகாதார மேம்பாட்டு பணியகம் கோரியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles