Thursday, June 25, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅதிக விலைக்கு அரிசி விற்போருக்கு எதிராக நடவடிக்கை

அதிக விலைக்கு அரிசி விற்போருக்கு எதிராக நடவடிக்கை

இந்த வருடமும் அதிக விலைக்கு அரிசி விற்கப்படும் இடங்களை கண்டறியும் வகையில் விரிவான சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் 2278/02 வர்த்தமானி அறிவித்தலின் உதவியுடன், அரிசி விற்பனை செய்யப்படும் நபர்கள் மற்றும் இடங்களைத் தேடி நாடளாவிய ரீதியில் சோதனைகள் நடத்தப்படும் என அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பொது விடுமுறை நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் இந்த சோதனைகள் நடத்தப்படுவதால், அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் நபர்கள் மற்றும் இடங்கள் குறித்து 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு நுகர்வோர் அதிகாரசபை கோரியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles