Monday, June 22, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டு5 கோடி ரூபா கப்பம் கோரிய நபர் கைது

5 கோடி ரூபா கப்பம் கோரிய நபர் கைது

நபரொருவருக்கு கொலை மிரட்டல் விடுத்து 05 கோடி ரூபா கப்பம் கோரிய குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் நேற்று (20) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குடோபுத்கமுவ, அங்கொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குடோபுத்கமுவ, அங்கொட பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடையவர்.

சந்தேகநபருக்கும் முறைப்பாட்டாளருக்கும் இடையில் காணி தகராறு காரணமாக வெளிநாட்டில் உள்ள மகன் ஊடாக சந்தேக நபர் இந்த கொலை மிரட்டல்களை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles