Wednesday, May 6, 2026
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

பெரிய வெங்காயத்தின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த இரு நாட்களில் சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலையானது சுமார் 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

தற்போது சில்லறை சந்தையில் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயம் 380 முதல் 450 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

வெங்காய ஏற்றுமதிக்கான தடையினை இந்தியா 2024 மார்ச் மாதம் வரை நீடித்துள்ளது.

இந்தியாவின் முடிவினால் இலங்கை வெங்காய இறக்குமதியாளர்கள் உள்ளூர் தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles