இடைநிறுத்தப்பட்டுள்ள யாழ்ப்பணத்துக்கான நீர் வழங்கல் திட்டம் அடுத்த வருடம் மீள ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று (11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன்மூலம் வடக்கின் நீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
திட்டத்தின் ஆரம்ப ஆய்வுகள் டச்சு அரசாங்கத்தின் கீழ் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, முதற்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளதுடன், 2024ஆம் ஆண்டு மீண்டும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று (11) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நீர்ப்பாசன அமைச்சின் செலவின தலைப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.