வடக்குயாழில் அனுமதியின்றி நடந்த இரவு இசை விருந்து

யாழில் அனுமதியின்றி நடந்த இரவு இசை விருந்து

யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் பொலிசாரின் அனுமதியின்றி யாழ்.நகரை அண்டிய பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலில் இரவு இசை விருந்து (DJ Night) நேற்றைய தினம் இரவு நடத்தப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில், ஒருவருக்கு உணவுடனான நுழைவு சீட்டு 3,000 ரூபாவுக்கும் , சாதாரண நுழைவு சீட்டு 1,500 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கோளிகை நிகழ்வுகளுக்கு , நுழைவு சீட்டு விற்பனை செய்வதாயின் மாநகர சபையின் அனுமதி பெறப்பட வேண்டும் என்பதுடன் ,நுழைவு சீட்டின் பெறுமதியில் குறிப்பிட்ட வீதம் மாநகர சபைக்கு வரியாக செலுத்தப்பட வேண்டும். ஆனால் வரி ஏய்ப்பு செய்யும் முகமாகவும் எவ்வித அனுமதிகளும் இன்றி நிகழ்வு நடப்பட்டுள்ளது.

நிகழ்வில் மது மற்றும் போதை பொருள் பாவனைகள் காணப்பட்டதாகவும் , கைக்கலப்புக்களும் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles